கவிதை – வறுமை

குப்பை குவியலுக்குள்களைத்த பார்வையும் நெளிந்த தேகமுமாய்இக்குழந்தையின் அதிகபட்சகனவு என்னவாக இருக்கும்? காலை கண்விழித்து,கால் கடுக்க நடந்து, திரிந்து, சம்பாதித்து,கால் வயிறு நிறையும் வாழ்வுநிறைவாவது எப்போது என்பதா? வறுமையில் மக்கள்வாடித்துயர் படும்வாழ்க்கை நல்வளமாவது எப்போது என்பதா? இன்றோ என்றோஎம் வாழ்க்கைஎல்லோர் போலும்இன்புறுவது எப்போது என்பதா? சாக்கடை நதிக்கு நடுவேசணல்பை இடைவெளியை விட சிறியஇடத்திலான வீடு விசாலமாய்வியாபித்தல் எப்போது என்பதா? தேனாறும் பாலாறும் பாயும் என்றுஎல்லா விடுதலை நாள் உரையிலும்உரைக்கும் மக்கள் பிரதிநிதியின் வரிகள்உண்மையாவது எப்போது என்பதா? கால் செருப்பு […]

Read More கவிதை – வறுமை

உடைத்து விடுங்கள்

ஒரு துகள் கூட மிச்சம் இருக்க கூடாதுஉடைத்து விடுங்கள்சாதிகளை சாக்கடை என்ற தந்தை பெரியார் மண்ணில்சாதியின் பெயரால் என் சிலை உடைக்கப்பட்டது என்றால்உடைத்து விடுங்கள்ஒரு துகள் கூட மிச்சம் இருக்க கூடாதுஉடைத்து விடுங்கள் உடைக்கப்பட வேண்டியவன் நான்மானுட பிறப்பில் உயர்வு தாழ்வைஉடைத்தெறிய பாடுபட்டவன் நான் ஆகையால் உடைக்கப்பட வேண்டியவன் தான் நான் சகதிக்குள் புரளும் புழுவைவிட கீழானவனாக ஒருவன் மதிக்கப்பட்ட சமுதாயத்தின் சாக்கடை எண்ணங்களை உடைத்தெறிய பாடு பட்டவன் நான் ஆகையால் உடைக்கப்பட வேண்டியவன் தான் நான் […]

Read More உடைத்து விடுங்கள்