Blog

கவிதை – செருப்பு மயிரு

நீங்கள் எங்களை செருப்பு என்கிறீர்கள்கவலை இல்லைநீங்கள் எங்களை செருப்பு என்கிறீர்கள்கவலை இல்லை நாங்கள் கவலையோடு சொல்கிறோம்நீங்கள் எங்களுக்கு மயிருநாங்கள் கவலையோடு சொல்கிறோம்நீங்கள் எங்களுக்கு மயிரு. தலைக்கு மேலே இருப்பதால் மட்டுமேமயிர் சிறப்பாக்கி விடாதுகாலுக்கு கீழே இருப்பதால்செருப்பு இழிவாகிவிடாது மயிர் அலங்காரமே தவிர அதற்கும் அறிவுக்கும் தொடர்பில்லைஆதிக்குடியின் அடிமை விலங்கைஉடைத்த புரட்சி செருப்புக்கு உண்டு வெட்ட வெட்ட முளைக்குமாமே இந்த மயிரு,வேண்டாம் என்று மக்களால் வெட்டிய பின்னும்முளைக்கும் இந்த மானங்கெட்ட மயிருமக்களை பிடித்த பிணி துயரு. நாவில் நஞ்சு…

Read More கவிதை – செருப்பு மயிரு

கவிதை – இயேசு

நசரத்து வீதியில் அங்குமிங்குமாய்அலைந்திட்ட மனித மந்தைகளுக்குநடுவே அந்த மெய்ப்பரை சுமந்தகருவுற்ற கன்னி மரியாள் நகர்ந்து வந்தாள். நீண்ட நெடிய பயணம்கால் கடுத்தது,இரைப்பையில் இருந்த மிச்ச உணவும்வியர்வையாய் வழிந்தது, கொழுப்பு கரைந்து கரைந்து உந்து சக்தியை கொடுத்தது,நீர் பருகினால், உணவு அருந்தினால்,நடையை துவங்கினாள். மண் மேடுகள் தாங்கிய அந்த மலை நகரத்தின் குடிகள்மன்னனின் சொல் கேட்டு தேவ மைந்தனின் வருகையை மருதளித்தனர். மாட்டு கொட்டகை மடி விரித்தது.வைக்கோலை வகைப்படுத்திவையத்து வேந்தனைவரவேற்க துடித்தனன் யோசப். ஆநிரைகள் ஆர்பரிக்கஅமுதூறிய நெஞ்சங்கள்அன்பு பொழிந்தொடஅகிலத்தின்…

Read More கவிதை – இயேசு

கவிதை – காதல்

தொட்டுக்கொண்டு சிலகாலம்தொடாமல் தூர நின்று சிலகாலம்காதலித்த நினைவுகள் கண்ணுக்குள் கண்ணீராய் கனக்கின்றது. உன் எல்லை ஊர்முழுக்க விரிந்த போதும்நான் தலை நிமிர்ந்து வான் முட்ட உயர்ந்த போதும்நான் நீ என்ற அகந்தை ஒருபோதும் நம்மிடையே விழித்ததில்லை. நினைவுகூர்கிறேன் நம் காதலை ஆடிப்பெருக்கில்அழகிய மாலையில், பவளத்திற்கு பட்டு கட்டிசாட்டை முடிக்கு சடை பின்னிசங்குக் கழுத்தில் ஆரங்கள் அணியபொன்னடி கொண்ட மங்கையர்மெல்லடி வைத்து நதிக்கரையோரம் நடக்கையிலே ஆறடி உயரம்அரைசதம் புருவம்வீரிய மீசைவிரட்டிய பார்வை கொண்ட காளையர்அவர் பின்னே அலைந்திடவே. நீ…

Read More கவிதை – காதல்

கவிதை – மா

மண்ணில் விதைத்த முத்துக் கொடிகால் அகண்டு விரிந்த சின்னஞ் செடிசிறிய கனியாகி பெரிய பலமானமாங்கனி இனிக்கும் அமுதக்கனி முக்கனியில் மூத்தவனேமுருகனின் மூத்தவனை உனக்காகமுந்தவைத்து சிண்டு முடிந்தவனேதிருவிளையாடல் தந்தவனே வகைக்கொரு மாம்பழம்வரலாறு நீளும், நீர்செவிமடுத்து கேட்க அவர்கதை சொல்லவா? கட்டிகரும்பின் பகைகட்டெரும்பும் கடிக்க துடிக்கும் சுவைபருவம் முன்னர் பூக்கும் மாமரம்செந்தூர வாசம் வீசும் செந்தூரம் காமமுற்ற கருவண்டுமஞ்சள் வண்ண தோல் கண்டுபசி அடங்கும் பழமுண்டுஅதற்கு ருமானி என்று பெயருண்டு துங்கபத்ரா நதி நீராடிவிஜயநகர கர்னூலில் விளைந்தசாரில்லாத சதைபற்றான பழம்இது…

Read More கவிதை – மா

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

About Me

Hi, I’m Kathiravan PanneerSelvam, a freelance writer, an English professor – who loves writing short stories, letters, articles and what not ? in both English and Tamil

The art of writing tickled my mind in 2008 where I first started penning my words.

This blog is sharing my literary love, experience and memories with you!

Subscribe to My Blog

Get new content delivered directly to your inbox.