கவிதை – வறுமை

குப்பை குவியலுக்குள்களைத்த பார்வையும் நெளிந்த தேகமுமாய்இக்குழந்தையின் அதிகபட்சகனவு என்னவாக இருக்கும்? காலை கண்விழித்து,கால் கடுக்க நடந்து, திரிந்து, சம்பாதித்து,கால் வயிறு நிறையும் வாழ்வுநிறைவாவது எப்போது என்பதா? வறுமையில் மக்கள்வாடித்துயர் படும்வாழ்க்கை நல்வளமாவது எப்போது என்பதா? இன்றோ என்றோஎம் வாழ்க்கைஎல்லோர் போலும்இன்புறுவது எப்போது என்பதா? சாக்கடை நதிக்கு நடுவேசணல்பை இடைவெளியை விட சிறியஇடத்திலான வீடு விசாலமாய்வியாபித்தல் எப்போது என்பதா? தேனாறும் பாலாறும் பாயும் என்றுஎல்லா விடுதலை நாள் உரையிலும்உரைக்கும் மக்கள் பிரதிநிதியின் வரிகள்உண்மையாவது எப்போது என்பதா? கால் செருப்பு […]

Read More கவிதை – வறுமை

கவிதை – வாடகைக்கு வந்த மனிதன்

வாடகைக்கு வந்த மனிதன் தூசியாய் விழுந்துநுண்ணுயிராய் எழுந்துபுல்லாய்பூவாய்மரமாய்காடாய் உருவான என்‌வீடு. என் போலஉருப்பெற்றுஉயிர்பெற்றுஉருவானான்‌ ‌‌மனிதன்அவனைநண்பனென்பதா,அண்டை வீட்டார் என்பதா,உடன்பிறப்பு என்பதா,வாடகைக்காரன் எனலாம் அதுதான் சரி. என் வீட்டை மிருகங்களுக்கு வாடகைக்கு விட்டேன் இனக்கமாய் இருந்ததுஎன் வீட்டை பறவைகளுக்கு வாடகைக்கு விட்டேன் இயல்பாய் இருந்ததுஎன் வீட்டை பூச்சிகளுக்கு வாடகைக்கு விட்டேன் புத்துயிர் பெற்றதுஎன் வீட்டை மனிதனுக்கு வாடகைக்கு விட்டேன் என் வீடு காணாமல் போனது. ஒட்டகமும் முல்லாவும் கதை இங்கு நடந்தது.அவனுக்காக இறக்கமுற்றேன்சுவாசிக்க வாயுஇருக்க இடம் உண்ண உணவுஉடுத்த இலை மழைக்கு பொந்துவெயிலுக்கு […]

Read More கவிதை – வாடகைக்கு வந்த மனிதன்

நினைவுகூறல் – முதல் பரிசு

முதல் பரிசு கடந்த ஆண்டு நவாம்பர் மாதம் “நீலம்” புயலின் மழை போல இல்லாவிட்டாலும் வழக்கத்துக்கு சற்று அதிகமாகவே மழை பொழிந்துகொண்டிருந்தது. என் சிறு வயது முதலே மழை என்பது எனக்கு ஒரு தீண்டாமை தான். மழைத்துளிகள் மண்ணில் விழுவதற்குள்ளேயே எங்காவது  மறைந்து கொள்பவன் நான். ஈரக்காற்றை இடிப்பது என்பது  என்னால் இயலாத காரியமாக இருக்கும் . மழையை வெறுத்ததும் இல்லை, ரசித்ததும் இல்லை, சரி சம்பவத்துக்கு வரலாம். அன்று  அதிகாலை  முதலே நல்ல மழை, பள்ளி […]

Read More நினைவுகூறல் – முதல் பரிசு