கவிதை – காதல்

தொட்டுக்கொண்டு சிலகாலம்தொடாமல் தூர நின்று சிலகாலம்காதலித்த நினைவுகள் கண்ணுக்குள் கண்ணீராய் கனக்கின்றது. உன் எல்லை ஊர்முழுக்க விரிந்த போதும்நான் தலை நிமிர்ந்து வான் முட்ட உயர்ந்த போதும்நான் நீ என்ற அகந்தை ஒருபோதும் நம்மிடையே விழித்ததில்லை. நினைவுகூர்கிறேன் நம் காதலை ஆடிப்பெருக்கில்அழகிய மாலையில், பவளத்திற்கு பட்டு கட்டிசாட்டை முடிக்கு சடை பின்னிசங்குக் கழுத்தில் ஆரங்கள் அணியபொன்னடி கொண்ட மங்கையர்மெல்லடி வைத்து நதிக்கரையோரம் நடக்கையிலே ஆறடி உயரம்அரைசதம் புருவம்வீரிய மீசைவிரட்டிய பார்வை கொண்ட காளையர்அவர் பின்னே அலைந்திடவே. நீ […]

Read More கவிதை – காதல்

கவிதை – மா

மண்ணில் விதைத்த முத்துக் கொடிகால் அகண்டு விரிந்த சின்னஞ் செடிசிறிய கனியாகி பெரிய பலமானமாங்கனி இனிக்கும் அமுதக்கனி முக்கனியில் மூத்தவனேமுருகனின் மூத்தவனை உனக்காகமுந்தவைத்து சிண்டு முடிந்தவனேதிருவிளையாடல் தந்தவனே வகைக்கொரு மாம்பழம்வரலாறு நீளும், நீர்செவிமடுத்து கேட்க அவர்கதை சொல்லவா? கட்டிகரும்பின் பகைகட்டெரும்பும் கடிக்க துடிக்கும் சுவைபருவம் முன்னர் பூக்கும் மாமரம்செந்தூர வாசம் வீசும் செந்தூரம் காமமுற்ற கருவண்டுமஞ்சள் வண்ண தோல் கண்டுபசி அடங்கும் பழமுண்டுஅதற்கு ருமானி என்று பெயருண்டு துங்கபத்ரா நதி நீராடிவிஜயநகர கர்னூலில் விளைந்தசாரில்லாத சதைபற்றான பழம்இது […]

Read More கவிதை – மா

கவிதை – வாடகைக்கு வந்த மனிதன்

வாடகைக்கு வந்த மனிதன் தூசியாய் விழுந்துநுண்ணுயிராய் எழுந்துபுல்லாய்பூவாய்மரமாய்காடாய் உருவான என்‌வீடு. என் போலஉருப்பெற்றுஉயிர்பெற்றுஉருவானான்‌ ‌‌மனிதன்அவனைநண்பனென்பதா,அண்டை வீட்டார் என்பதா,உடன்பிறப்பு என்பதா,வாடகைக்காரன் எனலாம் அதுதான் சரி. என் வீட்டை மிருகங்களுக்கு வாடகைக்கு விட்டேன் இனக்கமாய் இருந்ததுஎன் வீட்டை பறவைகளுக்கு வாடகைக்கு விட்டேன் இயல்பாய் இருந்ததுஎன் வீட்டை பூச்சிகளுக்கு வாடகைக்கு விட்டேன் புத்துயிர் பெற்றதுஎன் வீட்டை மனிதனுக்கு வாடகைக்கு விட்டேன் என் வீடு காணாமல் போனது. ஒட்டகமும் முல்லாவும் கதை இங்கு நடந்தது.அவனுக்காக இறக்கமுற்றேன்சுவாசிக்க வாயுஇருக்க இடம் உண்ண உணவுஉடுத்த இலை மழைக்கு பொந்துவெயிலுக்கு […]

Read More கவிதை – வாடகைக்கு வந்த மனிதன்