கவிதை – காதல்

தொட்டுக்கொண்டு சிலகாலம்தொடாமல் தூர நின்று சிலகாலம்காதலித்த நினைவுகள் கண்ணுக்குள் கண்ணீராய் கனக்கின்றது. உன் எல்லை ஊர்முழுக்க விரிந்த போதும்நான் தலை நிமிர்ந்து வான் முட்ட உயர்ந்த போதும்நான் நீ என்ற அகந்தை ஒருபோதும் நம்மிடையே விழித்ததில்லை. நினைவுகூர்கிறேன் நம் காதலை ஆடிப்பெருக்கில்அழகிய மாலையில், பவளத்திற்கு பட்டு கட்டிசாட்டை முடிக்கு சடை பின்னிசங்குக் கழுத்தில் ஆரங்கள் அணியபொன்னடி கொண்ட மங்கையர்மெல்லடி வைத்து நதிக்கரையோரம் நடக்கையிலே ஆறடி உயரம்அரைசதம் புருவம்வீரிய மீசைவிரட்டிய பார்வை கொண்ட காளையர்அவர் பின்னே அலைந்திடவே. நீ […]

Read More கவிதை – காதல்

கவிதை – மா

மண்ணில் விதைத்த முத்துக் கொடிகால் அகண்டு விரிந்த சின்னஞ் செடிசிறிய கனியாகி பெரிய பலமானமாங்கனி இனிக்கும் அமுதக்கனி முக்கனியில் மூத்தவனேமுருகனின் மூத்தவனை உனக்காகமுந்தவைத்து சிண்டு முடிந்தவனேதிருவிளையாடல் தந்தவனே வகைக்கொரு மாம்பழம்வரலாறு நீளும், நீர்செவிமடுத்து கேட்க அவர்கதை சொல்லவா? கட்டிகரும்பின் பகைகட்டெரும்பும் கடிக்க துடிக்கும் சுவைபருவம் முன்னர் பூக்கும் மாமரம்செந்தூர வாசம் வீசும் செந்தூரம் காமமுற்ற கருவண்டுமஞ்சள் வண்ண தோல் கண்டுபசி அடங்கும் பழமுண்டுஅதற்கு ருமானி என்று பெயருண்டு துங்கபத்ரா நதி நீராடிவிஜயநகர கர்னூலில் விளைந்தசாரில்லாத சதைபற்றான பழம்இது […]

Read More கவிதை – மா

கவிதை – எங்கள் ஊர்

தமிழ்நாட்டின் முகமாய் அறிந்திடும் நாடுகருநெல்லிக்கனியை ஈதவன் நாடுபல்லவர் பண்புற்று பாடிய நாடுசோழனின் சொல்வளம் செறிந்த நாடுநுளம்பரும், நாயக்கரும் ஆண்ட நாடுதிப்புவின் அரணாய் அமைந்த நாடு.எங்கள் நாடு,எழில் கொஞ்சும் நாடு. இதுஎயில் நாடு. மும்மொழி பேச்சில் முத்துக்கள் உதிர்ந்திடும், நாங்கள்முதுதமிழ் பேசினால் அரங்கம் அதிர்ந்திடும்.மன்னர்கள் ஆண்ட மலைநகரம்,இன்று மந்திரிகள் ஆளும் ‘மா’ நகரம். காவிரி தென்பெண்ணை பாய்ந்து ஓடும்காதல் கொஞ்சிடும் மங்கையர் எழில் பாடும்காணும் இடமெங்கும் மலைகளின் மீட்சிகாணக் கிடைக்காத அற்புத காட்சி. ஹைதர் பெயர் சொல்லும் அஞ்செட்டி […]

Read More கவிதை – எங்கள் ஊர்

கவிதை – வாடகைக்கு வந்த மனிதன்

வாடகைக்கு வந்த மனிதன் தூசியாய் விழுந்துநுண்ணுயிராய் எழுந்துபுல்லாய்பூவாய்மரமாய்காடாய் உருவான என்‌வீடு. என் போலஉருப்பெற்றுஉயிர்பெற்றுஉருவானான்‌ ‌‌மனிதன்அவனைநண்பனென்பதா,அண்டை வீட்டார் என்பதா,உடன்பிறப்பு என்பதா,வாடகைக்காரன் எனலாம் அதுதான் சரி. என் வீட்டை மிருகங்களுக்கு வாடகைக்கு விட்டேன் இனக்கமாய் இருந்ததுஎன் வீட்டை பறவைகளுக்கு வாடகைக்கு விட்டேன் இயல்பாய் இருந்ததுஎன் வீட்டை பூச்சிகளுக்கு வாடகைக்கு விட்டேன் புத்துயிர் பெற்றதுஎன் வீட்டை மனிதனுக்கு வாடகைக்கு விட்டேன் என் வீடு காணாமல் போனது. ஒட்டகமும் முல்லாவும் கதை இங்கு நடந்தது.அவனுக்காக இறக்கமுற்றேன்சுவாசிக்க வாயுஇருக்க இடம் உண்ண உணவுஉடுத்த இலை மழைக்கு பொந்துவெயிலுக்கு […]

Read More கவிதை – வாடகைக்கு வந்த மனிதன்

நினைவுகூறல் – முதல் பரிசு

முதல் பரிசு கடந்த ஆண்டு நவாம்பர் மாதம் “நீலம்” புயலின் மழை போல இல்லாவிட்டாலும் வழக்கத்துக்கு சற்று அதிகமாகவே மழை பொழிந்துகொண்டிருந்தது. என் சிறு வயது முதலே மழை என்பது எனக்கு ஒரு தீண்டாமை தான். மழைத்துளிகள் மண்ணில் விழுவதற்குள்ளேயே எங்காவது  மறைந்து கொள்பவன் நான். ஈரக்காற்றை இடிப்பது என்பது  என்னால் இயலாத காரியமாக இருக்கும் . மழையை வெறுத்ததும் இல்லை, ரசித்ததும் இல்லை, சரி சம்பவத்துக்கு வரலாம். அன்று  அதிகாலை  முதலே நல்ல மழை, பள்ளி […]

Read More நினைவுகூறல் – முதல் பரிசு

சிறுகதை

வன்முறை வன்முறை இந்த நான்கெழுத்து வர்த்தைக்குள் மட்டும் அத்தனை சத்தம், சஞ்சலம், குருகுருப்பு, வெறுப்பு, அமிலத்தை விழுங்கி உமிழ்வதை போன்ற உணர்வு. புரட்சி, வன்மம், ஆதிக்கம், அதிகாரம், அரசியல், இயல்பு என வன்முறை பலவகை பொருள்படும். வன்முறையும் ஒருவகை போதை பொருள்தானே உட்கொள்ள….உட்கொள்ள….. “கொல்ல” துடித்திடும் ரத்த ஆற்றை கடந்து வெற்றிக் கிரீடத்தை தறித்துக்கொள்ள தவிக்கும். இந்த கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு என் கற்பனை தேரினிலேற்றி எழுதப்பட்டது. அறிமுகம் மரங்கள் அசைந்தாடிகொண்டு அழகான காலைப்பொழுதை […]

Read More சிறுகதை