கவிதை – இயேசு

நசரத்து வீதியில் அங்குமிங்குமாய்அலைந்திட்ட மனித மந்தைகளுக்குநடுவே அந்த மெய்ப்பரை சுமந்தகருவுற்ற கன்னி மரியாள் நகர்ந்து வந்தாள். நீண்ட நெடிய பயணம்கால் கடுத்தது,இரைப்பையில் இருந்த மிச்ச உணவும்வியர்வையாய் வழிந்தது, கொழுப்பு கரைந்து கரைந்து உந்து சக்தியை கொடுத்தது,நீர் பருகினால், உணவு அருந்தினால்,நடையை துவங்கினாள். மண் மேடுகள் தாங்கிய அந்த மலை நகரத்தின் குடிகள்மன்னனின் சொல் கேட்டு தேவ மைந்தனின் வருகையை மருதளித்தனர். மாட்டு கொட்டகை மடி விரித்தது.வைக்கோலை வகைப்படுத்திவையத்து வேந்தனைவரவேற்க துடித்தனன் யோசப். ஆநிரைகள் ஆர்பரிக்கஅமுதூறிய நெஞ்சங்கள்அன்பு பொழிந்தொடஅகிலத்தின் […]

Read More கவிதை – இயேசு

கவிதை – காதல்

தொட்டுக்கொண்டு சிலகாலம்தொடாமல் தூர நின்று சிலகாலம்காதலித்த நினைவுகள் கண்ணுக்குள் கண்ணீராய் கனக்கின்றது. உன் எல்லை ஊர்முழுக்க விரிந்த போதும்நான் தலை நிமிர்ந்து வான் முட்ட உயர்ந்த போதும்நான் நீ என்ற அகந்தை ஒருபோதும் நம்மிடையே விழித்ததில்லை. நினைவுகூர்கிறேன் நம் காதலை ஆடிப்பெருக்கில்அழகிய மாலையில், பவளத்திற்கு பட்டு கட்டிசாட்டை முடிக்கு சடை பின்னிசங்குக் கழுத்தில் ஆரங்கள் அணியபொன்னடி கொண்ட மங்கையர்மெல்லடி வைத்து நதிக்கரையோரம் நடக்கையிலே ஆறடி உயரம்அரைசதம் புருவம்வீரிய மீசைவிரட்டிய பார்வை கொண்ட காளையர்அவர் பின்னே அலைந்திடவே. நீ […]

Read More கவிதை – காதல்

கவிதை – மா

மண்ணில் விதைத்த முத்துக் கொடிகால் அகண்டு விரிந்த சின்னஞ் செடிசிறிய கனியாகி பெரிய பலமானமாங்கனி இனிக்கும் அமுதக்கனி முக்கனியில் மூத்தவனேமுருகனின் மூத்தவனை உனக்காகமுந்தவைத்து சிண்டு முடிந்தவனேதிருவிளையாடல் தந்தவனே வகைக்கொரு மாம்பழம்வரலாறு நீளும், நீர்செவிமடுத்து கேட்க அவர்கதை சொல்லவா? கட்டிகரும்பின் பகைகட்டெரும்பும் கடிக்க துடிக்கும் சுவைபருவம் முன்னர் பூக்கும் மாமரம்செந்தூர வாசம் வீசும் செந்தூரம் காமமுற்ற கருவண்டுமஞ்சள் வண்ண தோல் கண்டுபசி அடங்கும் பழமுண்டுஅதற்கு ருமானி என்று பெயருண்டு துங்கபத்ரா நதி நீராடிவிஜயநகர கர்னூலில் விளைந்தசாரில்லாத சதைபற்றான பழம்இது […]

Read More கவிதை – மா

கவிதை – வறுமை

குப்பை குவியலுக்குள்களைத்த பார்வையும் நெளிந்த தேகமுமாய்இக்குழந்தையின் அதிகபட்சகனவு என்னவாக இருக்கும்? காலை கண்விழித்து,கால் கடுக்க நடந்து, திரிந்து, சம்பாதித்து,கால் வயிறு நிறையும் வாழ்வுநிறைவாவது எப்போது என்பதா? வறுமையில் மக்கள்வாடித்துயர் படும்வாழ்க்கை நல்வளமாவது எப்போது என்பதா? இன்றோ என்றோஎம் வாழ்க்கைஎல்லோர் போலும்இன்புறுவது எப்போது என்பதா? சாக்கடை நதிக்கு நடுவேசணல்பை இடைவெளியை விட சிறியஇடத்திலான வீடு விசாலமாய்வியாபித்தல் எப்போது என்பதா? தேனாறும் பாலாறும் பாயும் என்றுஎல்லா விடுதலை நாள் உரையிலும்உரைக்கும் மக்கள் பிரதிநிதியின் வரிகள்உண்மையாவது எப்போது என்பதா? கால் செருப்பு […]

Read More கவிதை – வறுமை

கவிதை – எங்கள் ஊர்

தமிழ்நாட்டின் முகமாய் அறிந்திடும் நாடுகருநெல்லிக்கனியை ஈதவன் நாடுபல்லவர் பண்புற்று பாடிய நாடுசோழனின் சொல்வளம் செறிந்த நாடுநுளம்பரும், நாயக்கரும் ஆண்ட நாடுதிப்புவின் அரணாய் அமைந்த நாடு.எங்கள் நாடு,எழில் கொஞ்சும் நாடு. இதுஎயில் நாடு. மும்மொழி பேச்சில் முத்துக்கள் உதிர்ந்திடும், நாங்கள்முதுதமிழ் பேசினால் அரங்கம் அதிர்ந்திடும்.மன்னர்கள் ஆண்ட மலைநகரம்,இன்று மந்திரிகள் ஆளும் ‘மா’ நகரம். காவிரி தென்பெண்ணை பாய்ந்து ஓடும்காதல் கொஞ்சிடும் மங்கையர் எழில் பாடும்காணும் இடமெங்கும் மலைகளின் மீட்சிகாணக் கிடைக்காத அற்புத காட்சி. ஹைதர் பெயர் சொல்லும் அஞ்செட்டி […]

Read More கவிதை – எங்கள் ஊர்